நடிகர் மனோஜ் மன்சு 2வது திருமணம் – அரசியல்வாதி மகளை மணக்கிறார் | Manchu Manoj 2nd Marriage – Marries Politicians Daughter

Estimated read time 1 min read

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் இளைய மகன், மனோஜ் மன்சு. இவர், கடந்த 2019-ம் ஆண்டு மனைவி பிரணதியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இவர், 6 வருடத்துக்குப் பிறகு, ‘வாட் எஃபிஷ்’ என்ற படத்தில் நடிப்பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார். பான் இந்தியா முறையில் இந்தப் படம் உருவாகிறது. இந்நிலையில், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

ஆந்திர அரசியல்வாதியான பூமா நாகிரெட்டி மகள் பூமா மவுனிகாவை, மனோஜ் மணக்க இருக்கிறார். இவர்கள் திருமணம் மார்ச் 3ம் தேதி எளிமையாக நடக்க இருக்கிறது. “எனக்கு மவுனிகாவை பல வருடங்களாகத் தெரியும். அவர் என் வாழ்க்கையில் வந்தது என் அதிர்ஷ்டம்” என்று மனோஜ் தெரிவித்துள்ளார். மவுனிகாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours