பார்ப்பதற்கு அஜித் மாதிரி இருந்தால் சினிமாவில் நிறைய வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நாமோ லைட்டை போட்டால்தான் தெரிவோம். நடிப்பதற்கு முயற்சி எடுத்து கிடைக்கவில்லை என்றதும், தோற்றுப் போக எனக்கு விருப்பமில்லை. எனவே அதன் பின்னர் பாக்யராஜ் சாரிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, இயக்குநர் ஆகி நான் நினைத்ததை அடைந்துவிட்டேன். பார்த்திபனின் கனவு என்பது… மிக நீண்ட கனவு! நான் நினைத்த கனவினை அடைந்த பிறகு, அடுத்த கனவு, அடுத்த கனவு என்று போய்க்கொண்டிருக்கிறது.
கனவுகளுக்கு எல்லையே கிடையாது. கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். அதற்காக தொடர் முயற்சியும், பயிற்சியும் மேற்கொண்டு கொண்டே இருக்க வேண்டும். பார்த்திபன் கனவு… கல்கியின் கனவை விட நீண்டது. என்னை பொறுத்தவரை, சரியான வளர்ச்சி அடைந்த பின் வருவது தான் தன்னடக்கம். பொன்னியின் செல்வன் படத்திற்கான விழாவில் ரஜினி சார் பேசியது தான் அந்த படத்தை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அவர் அங்கு பேசிய தன்னடக்கமான பேச்சு தான் மிக அழகானது. என்னுடைய முன்மாதிரி என்னுடைய அப்பா ராதாகிருஷ்ணன் தான். நான் நன்றாக பேசும் தமிழுக்கு காரணம் அவர்தான். இப்போது என்னுடைய ரோல்மாடல், நான் முகம் பார்க்கும் கண்ணாடிதான். “ஆண்டாள்” எனும் படம் என் எதிர்கால திரைப்பட திட்டத்தில் உள்ளது. அந்த படம் முழுக்க முழுக்க குடும்ப சித்திரம், அந்த காலத்து வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் வகையிலானது. அந்த மாதிரி படம் எடுப்பதற்கு விழுப்புரம், புதுவைப் பகுதியில் நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் கூறுங்கள்” என்றார்.
+ There are no comments
Add yours