மலையாள நடிகை சுபி சுரேஷ் திடீர் மரணம்

Estimated read time 1 min read

மலையாள நடிகை சுபி சுரேஷ் திடீர் மரணம்

23 பிப், 2023 – 11:59 IST

எழுத்தின் அளவு:


Malayalam-actress-Subi-suresh-passes-away

மலையாள சினிமாவின் காமெடி நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுபி சுரேஷ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 41. கல்லீரல் பிரச்னை காரணமாக ஆலுவா அருகே உள்ள ராஜகிரி மருத்துவமனையில் கடந்த 28ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று திடீர் மரணம் அடைந்தார்.

எர்ணாகுளத்தில் உள்ள திருப்புனித்தூரைச் சேர்ந்த சுபி, மேடையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தார். கொச்சி கலாபவன் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் அவர் தீவிரமாக பங்கேற்றார். அவரது நேரமும், உரையாடல்களை வழங்கும் தனித்துவமான பாணியும் அவர் தொலைக்காட்சி உலகில் நுழைய உதவியது. அவர் ஏசியாநெட்டில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

2006ம் ஆண்டு இயக்குனர் ராஜசேனனின் ‘கனகசிம்ஹாசனம்’ மூலம் பெரிய திரையில் நுழைந்தார். நாடகம், பஞ்சவர்ணதாதா, கில்லாடி ராமன், தஸ்கராலஹலா, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்தார். சுபியின் மரணத்திற்கு கேரள முதல்வர் பிரனராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours