2/23/2023 10:49:57 AM
சென்னை: ஹிருது ஹாரூண், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், அனஸ்வரா ராஜன், சரத் அப்பானி, பி.எல்.தேனப்பன், ரம்யா நடித்துள்ள படம், ‘தக்ஸ்’. இதை ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு, ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். பிரியேஷ் குருசுவாமி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ‘ஹே சினாமிகா’ படத்தை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்கியுள்ள இப்படம் நாளை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.
படம் குறித்து சாம் சி.எஸ் கூறுகையில்:
இப்படத்தின் கதையும், காட்சிகளும் தனித்துவம் வாய்ந்தது. இதன் இறுதிப்பதிப்பு அருமையாக வந்துள்ளது. பிருந்தா ஸ்கிரிப்ட்டை விவரித்தபோதே எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது முழு படமாக இன்னும் அதிகமாகப் பிடித்துள்ளது. இசை மற்றும் பாடல்களில் அவரது தலையீடு கிடையாது. அதுபோல் எந்த சமரசமும் இல்லாமல், தான் சொன்னதை திரையில் மிகச்சரியாகப் படமாக்கியுள்ளார். ஹிருது ஹாரூண் புதுமுகம் போல் தெரியவில்லை. சிறப்பாக நடித்துள்ளார்’ என்றார். ஹிருது ஹாரூண் கூறும்போது, ‘இப்படத்தில் வசனங்கள் குறைவு. சாம் சி.எஸ் இசை நிறைய பேசியிருக்கிறது’ என்றார்.
+ There are no comments
Add yours