அதனால் கனடா நாட்டு குடியுரிமையைப் பெற்றேன். அதற்குப் பின் நான் நடித்த இரண்டு படங்கள் நன்றாக ஓடின. அதனால் இந்தியா வந்து மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். இது தெரியாமல் பலரும் என்னை விமர்சித்து வருகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், தனது கனடா நாட்டுப் பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்துள்ளதாக நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “நான் கனடா நாட்டுப் பாஸ்போர்ட்டை துறக்க முடிவு செய்துள்ளேன். இந்தியாதான் எனக்கு எல்லாம். நான் இங்குதான் சம்பாதித்தேன். இங்கு உள்ளவர்கள்தான் என்னை வளர்த்து விட்டார்கள். தற்போது அவர்களுக்கு எல்லாம் திருப்பி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours