விக்ரம் – பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படத்தில் இணைந்த பிரிட்டிஷ் நடிகர்! யார் இவர்?

Estimated read time 2 min read

விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர் Daniel Caltagirone முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 61-வது படமாக ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கர்நாடகாவில் உள்ள கோலர் தங்க சுரங்கத்தில் வேலைப் பார்த்த தமிழர்கள் பட்ட துயரத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் வேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் ஆங்கிலேய நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் ‘தங்கலான்’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

‘The Beach’, ‘Lara Croft Tomb Raider: The Cradle of Life’, ஆஸ்கர் விருதுவென்ற ‘The Pianist’ உள்ளிட்டப் படங்களின் மூலம் நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் உலகளவில் பிரபாலனவர். மேலும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் உடன் இணைந்து, இந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன், மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours