“சில நொடிகளில் நான் உயிர் பிழைத்தேன்” – நடிகர் விஷால் பகிர்வு | Vishal and escape a severe accident on the sets of Mark Antony

Estimated read time 1 min read

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து “சில நொடிகளில் வாழ்க்கையை தொலைத்திருப்பேன்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படங்களின் மூலம் கவனம் பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் இப்போது விஷாலை வைத்து இயக்கி வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்நிலையில், சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் படத்தின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட லாரி நிற்காமல் செட்டில் வேகமாக மோதும் விடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்து குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், “சில நொடிகளில் சில அங்குலங்களில் நான் உயிர் பிழைத்தேன். கடவுளுக்கு நன்றி. இந்தச் சம்பவத்தால் என் கால் மறத்துப்போனது. மீண்டும் படப்பிடிப்பில்’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours