கவின் நடிப்பில் வெளியான ”டாடா” படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக கவின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எப்போதும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு நல்ல தருணம் இது. மிக்க நன்றி தனுஷ் சார் என குறிப்பிட்டுள்ளார்.

கவின் நெகிழ்ச்சி பதிவு:

அதோடு வெளியிட்டுள்ள ஒரு குறிப்பில், ”ஹாய் கவின் நான் தனுஷ் பேசுறேன். செவியால் நான் கேட்டதெல்லாம் உண்மையாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர எனது மனம் சில நொடிகளை எடுத்துக்கொள்ளும். உண்மை என்னவென்றால், நான் இன்னும் அந்த தருணத்தில் இருந்து வெளியே வரவில்லை, இதோ நான் தட்டச்சு செய்கிறேன். ”டாடா” திரைப்படத்தை பார்த்துவிட்டு தனுஷ் சாரிடம் இருந்து அழைப்பைப் பெறுவது உண்மையில் ஒரு அதிசயமான தருணம். உங்கள் எல்லா திரைப்படங்களையும் திரையில் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது. உங்கள் சிறந்த திறமையைக் கண்டு மீண்டும் மீண்டும் வியந்தேன். இன்று, உங்களிடமிருந்து ஒரு அழைப்பைப் பெறுவதை ஒரு எளிய நன்றியால் சுருக்க முடியாது. வளர்ந்து வரும் நடிகர்களைப் பாராட்டியதற்காக உங்களுக்கு மிகுந்த மரியாதை சார். வாத்தி திரைப்படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். எப்போதும்,  உங்களிடமிருந்து சிறந்த சினிமாவைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் சார்” என கவின் மகிழ்ச்சியும் பதிவிட்டுள்ளார்.

கவினின் டிவிட்டர் பதிவு

”டாடா” திரைப்படம்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குச் சென்று அங்கேயும் தனக்கான வெற்றிப்பாதையை உருவாக்கியுள்ளார் கவின். அவரது நடிப்பில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம், டாடா. மணிகண்டன் என்ற கதாப்பாத்திரத்தில் ஹீரோவாக கலக்கியுள்ளார். ஊதாரித்தனமான சுற்றி திரியும் நாயகனை, பிள்ளை பெற்றதுமே நாயகி பிரிந்து செல்கிறார்.

குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பும் நாயகனிடத்தில் வருகிறது. அதுவரை ஊதாரியாகவும் பொறுப்பற்றும் சுற்றித்திரிந்த மணி, தனது குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறார். தனது மனைவிக்கு குழந்தையை காண்பிக்கவே கூடாது என்ற எண்ணத்தோடு நாட்களைக் கடத்துகிறார், மணி. 4 வருடங்கள் கழித்து தனது மனைவியை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார். அங்கு என்ன நடந்தது என்பது தான் டாடா படத்தின் க்ளைமேக்ஸ்.

நெகிழ வைத்த தந்தை-மகன் பாசம்:

முதல் பாதியின் பாதி வரை, ஊர் சுற்றும் ஊதாரி இளைஞராகவும், திருமணத்திற்கு பிறகு பொறுப்பற்ற கணவராகவும் வரும் கவின், மகன் பிறந்த பிறகு நல்ல தந்தையாகவும் நல்ல மனிதராகவும் மாறுகிறார். முதலில், “என்னடா இவன், இவன்லாம் ஒரு மனிஷனா?” என்று ரசிகர்களை கோபமாக கேட்கவைத்த இவரது கதாப்பாத்திரம், அடுத்தடுத்த காட்சிகளில் அந்த நெகடிவ் பிம்பத்தை ரசிகர்களின் மனங்களில் இருந்து மொத்தமாக தூக்கிவிடுகிறது. அந்த வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த கவினுக்கு, பொதுமக்களை தாண்டி நடிகர் தனுஷும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

+ There are no comments
Add yours