இந்நிலையில் அவதார் நான்காம் பாகத்தை எடுப்பதற்கு முன் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு சம்பவம் குறித்து எழுதப்பட்டிருக்கும் ‘The Last Train From Hiroshima: The Survivors Look Back’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்க விரும்புவதாக ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி லாஸ் ஏஞ்சலீஸ் டைமிற்கு பேட்டி அளித்த அவர், “நாம் நினைத்துப் பார்ப்பதை விட மிகவும் மோசமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘The Last Train From Hiroshima: The Survivors Look Back’ என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்க விரும்புகிறேன். ஹிரோஷிமா சம்பவம் தொடர்பாகப் படம் எடுத்தால் அது காலத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன். மனிதர்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது அவை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவுறுத்தும் விதமாக இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours