Alia Bhatt: ரகசியமாக போட்டோ எடுக்க முயன்ற நபர்கள்; கோபமடைந்த ஆலியா பட்! என்ன நடந்தது? | Alia Bhatt blames the paparazzi for invading her privacy at her home

Estimated read time 1 min read

இந்நிலையில் ஆலியா பட்டிற்கு ஆதரவாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அர்ஜுன் கபூர் வெளியிட்ட பதிவில். “இது போன்ற செயல் முற்றிலும் வெட்கக்கேடானது. அவர் ஒரு பிரபலம் என்பதை மறந்து விடுங்கள். ஒரு பெண் தன் சொந்த வீட்டில் பாதுகாப்பாக உணரவில்லை என்றால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவரின் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுப்பவர்கள் அது தவறான செயல் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆலியா பட், அனுஷ்கா சர்மா

ஆலியா பட், அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ள பதிவில், “இது போன்ற செயல்கள் நடப்பது முதல் முறை அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கும் இதுபோன்று நடந்திருக்கிறது. எங்கள் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று பலமுறை கேட்டுக்கொண்டபோதும் அப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கரண் ஜோஹர், ஜான்வி கபூர் போன்றவர்களும் ஆலியா பட்டிற்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.  

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours