“ஹீரோயின் மாற்றம் தொடர்பா எங்கிட்ட யாரும் எதுவுமே பேசலைங்க. எனக்குத் தெரியாமத்தான் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கு. அதாவது ஒவ்வொரு மாசமும் 15-ம் தேதியில இருந்து 30-ம் தேதி வரைக்கும்தான் சீரியலுக்கான ஷூட்டிங் ஷெட்யூல். 1 முதல் 14-ம் தேதி வரை எனக்கு ஷூட்டிங் ஷெட்யூலே கிடையாது.
‘ஷூட்டிங் இல்லாத இந்த நாள்கள்ல எனக்கு பர்சனல் வேலை இருக்கு,வெ ளியூர் போற திட்டமும் இருக்கு’ன்னும் ஒரு மாசம் முன்னதாகவே யூனிட்டுக்குத் தெரிவிச்சிருந்தேன். அப்ப எல்லாம் ‘சரி’ன்னுதான் சொன்னாங்க. ஆனா என்ன நடந்ததுன்னு தெரியலை, எனக்குத் தெரியாமலேயே ‘டக்’னு ஆளை மாத்திட்டாங்க.
‘ஏன்’, ‘என்ன நடந்துச்சு’ன்னு நான் சம்பந்தப்பட்டவங்ககிட்ட கேட்டதுக்கு ‘கம்யூனிகேஷன் பிரச்னை’ன்னு சொல்றாங்க. ஒண்ணுமே புரியலை. ரொம்பவே வருத்தமாவும், வெறுப்பாவும் இருக்கு. அதனால இந்த விஷயம் தொடர்பா மேற்கொண்டு எதுவும் பேச வேண்டாம்னும் முடிவு செய்துட்டேன்” என்கிறார் இவர்.
+ There are no comments
Add yours