பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோடிக்கிடையில் அந்த நூறு நாள்களில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிவதெல்லாம் வடக்கில் சகஜம். தெற்கில் அப்படி ஒரு ஜோடியாக முதன் முதலில் நிஜ வாழ்க்கையில் இணைந்தார்கள் மலையாள பிக் பாஸ் ஜோடியான ஶ்ரீனிஷ் – பியர்லி.
வாழ்த்துக்களைச் சொல்லலாமென பாவனியை அலைபேசியில் பிடித்தால், “ஐரோப்பாவில் இருக்கிறேன்” எனச் சொன்னார்.
ஆனாலும் பேசினார்…
“சீரியல்களில் நடிச்சிட்டிருந்த எனக்கு ‘பிக் பாஸ் சீசன் 4’ வாய்ப்பைத் தந்த விஜய் டிவிக்கு முதல் நன்றியைத் தெரிவிச்சுக்க ஆசைப்படுறேன். ஏன்னா, அந்த ஒரு நிகழ்ச்சி என்னைப் பெரிய அளவுல ரசிகர்கள்கிட்டக் கொண்டு போயிடுச்சு. பிக் பாஸுக்கு முன், பின் என ரெண்டு பார்ட்டா என் லைஃபைப் பிரிச்சுக்கலாம்.
+ There are no comments
Add yours