இந்த பூஜையில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இதற்கிடையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்தனர். இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வந்த இந்த வீட்டின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் தனுஷ் புதிய வீட்டில் தன் பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷின் இந்த பிரம்மாண்ட வீடு சுமார் ரூ.150 கோடியில் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் சுப்ரமணியம் சிவா, “தம்பி தனுஷின் புதிய வீடு. கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள், தெய்வமாக உணரப் படுகிறார்கள். மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள். இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும், உன்னை பார்த்து ஏங்கட்டும், உன்னை கண்டு வியக்கட்டும், வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க” என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours