விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பினரும் எதிர்பார்த்து கொண்டிருந்த ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா இருவரும் நடிக்கும் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திலிருந்து திரிஷா விலகுவதாக சில வதந்திகள் பரவியது, பின்னர் காஷ்மீர் பகுதியில் இருக்கும் சில வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் ‘லியோ’ படக்குழுவின் முக்கியமான ஒரு நபரது வீட்டில் துயர சம்பவம் நடைபெற்று இருக்கிறது. பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தான் ‘லியோ‘ படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார், இவரது தாயார் பிப்ரவரி 18-ம் தேதியன்று இயற்கை எய்திவிட்டார்.
மேலும் படிக்க | அடுத்த படத்தின் பணியை தொடங்கிய ஹெச்.வினோத்! ஹீரோ யார் தெரியுமா?
இந்நிலையில் காஷ்மீரில் படப்பிடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மனோஜ் பரமஹம்சா தாயார் மரணமடைந்த செய்தி கேட்டதும், தனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுவிட்டார். இன்னும் சில தினங்களில் அவர் மீண்டும் காஷ்மீருக்கு திரும்பிவிடுவார் என்றும், அதுவரை அவருக்கு பதிலாக மற்றொரு கேமரா மேன் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியான ‘ஈரம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து “விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘நண்பன்’, ‘ராதே ஷ்யாம்’, ‘பீஸ்ட்’ மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கும் ‘துருவ நட்சத்திரம்’ உட்பட பல படங்களில் மனோஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கும் ‘லியோ’ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்தியூ தாமஸ், மனோபாலா மற்றும் பிக்பாஸ் ஜனனி போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு இருந்த இந்த படத்திற்கு சமீபத்தில் ‘லியோ’ என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டது. படத்தின் தலைப்பை அறிவிக்கும் விதமாக வெளியான ‘ப்ளடி ஸ்வீட்’ ப்ரோமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
மேலும் படிக்க | சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகல்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours