திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் – காரைக்காலில் யோகிபாபு சாமி தரிசனம் – Sivakarthikeyan at Thiruchendur

Estimated read time 1 min read

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன் – காரைக்காலில் யோகிபாபு சாமி தரிசனம்

19 பிப், 2023 – 11:08 IST

எழுத்தின் அளவு:


Sivakarthikeyan-at-Thiruchendur---Yogi-Babu-Sami-Darshan-at-Karaikal

சமீப காலமாக திரையுறையினர் திருப்பதி ஏழுமலையான், சபரிமலை ஐயப்பன் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி தனது 38வது பிறந்த நாளை கொண்டாடினார் சிவகார்த்திகேயன். அவரது பிறந்த நாளில் திரையுலகினரும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நேற்று தனது மனைவி, குழந்தைகளுடன் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மூலவர், சண்முகர், சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னதிகளில் அவர் சிறப்பு வழிபாடு செய்திருக்கிறார். இப்படி அவர் தரிசனம் செய்துவிட்டு குடும்பத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த பக்தர்கள் அவரைக் கண்டு முண்டியடித்துள்ளார்கள். இதன் காரணமாக கூட்ட நெரிசலில் சிவகார்த்திகேயன் சிக்கிக்கொள்ள சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து அங்கு நின்ற காவல்துறையினர் கூட்டத்திலிருந்து சிவகார்த்திகேயனையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாப்பாக அழைத்து வந்திருக்கிறார்கள். அதன்பிறகு அங்கு கூடிநின்ற பக்தர்களும், ரசிகர்களும், சிவகார்த்திகேயனுடன் செல்பி எடுப்பதற்கு ஆர்வம் காட்டியதால் சிறிது நேரம் ரசிகர்களின் செல்பிகளுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

யோகிபாபு

இதேபோல் நடிகர் யோகி பாபுவும் நேற்று மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் உள்ள ஸ்ரீ தர்பானேஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அங்கு கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது யோகி பாபு சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours