‘பகாசூரன்’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் | anurag kashyap praise mohan g directorial bakasuran movie

Estimated read time 1 min read

மோகன்.ஜியின் ‘பகாசூரன்’ படத்திற்கு பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரெளபதி’, ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார்.

‘பகாசூரன்’ திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பக்கத்தில், “பகாசூரன் திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது. என்னுடைய நண்பர் நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours