மகா சிவராத்திரிக்கு கர்நாடகாவில் உள்ள ஆதியோகி மையத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!

Estimated read time 1 min read

மகா சிவராத்திரிக்கு கர்நாடகாவில் உள்ள ஆதியோகி மையத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!

19 பிப், 2023 – 10:54 IST

எழுத்தின் அளவு:


Rajinikanth-went-to-Adiyogi-Center-in-Karnataka-for-Maha-Shivratri!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். நேற்று மகாசிவராத்திரியை ஒட்டி பெங்களூரில் அமைந்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிலைக்கு சிறப்பு வழிபாடுகள் விடிய விடிய நடைபெற்றுள்ளது.

கோயமுத்தூர் ஈஷா யோகா மையம் சார்பில் கடந்த ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் செக்க பல்லபுர மாவட்டத்தில் உள்ள நந்திமலை அடிவாரத்தில் இந்த ஆதியோகி சிலை மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோவையில் உள்ள சிவன் சிலை போலவே இங்கும் சிலை உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு நாளும் சென்று வழிபடுகிறார்கள். இந்த நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்ய நாராயணாவுடன் இணைந்து மகா சிவராத்திரியை பெங்களூரில் உள்ள ஆதியோகி சிலை முன்பு யோகேஸ்வர லிங்கத்தை வழிபாடு செய்திருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours