R Madhavan Video Audition For 3 Idiots Movie Video Viral On Social Media – Watch | Viral Video: ‘3 இடியட்ஸ்’

Estimated read time 1 min read

‘3 இடியட்ஸ்’ படத்தின் போது நடிகர் மாதவன் ஆடிஷன் கொடுத்த வீடியோ இன்ஸ்டாவில் பகிரப்பட்டது தற்போது வைரலாகி வருகிறது. 


‘3 இடியட்ஸ்’ திரைப்படம் அனைவரின் இதயத்திலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. தலைமுறை கடந்தாலும், பள்ளி கல்லூரி மாணவர்கள்  ராஞ்சோ, ஃபர்ஹான் மற்றும் ராஜு போன்ற உண்மையான நண்பர்களை தங்கள் வாழ்விலும் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் ஹிரானியின் பார்வையில் அமீர் கான், ஷர்மான் ஜோஷி மற்றும் ஆர் மாதவன் என ஒவ்வொருவரும் தங்களது சிறப்பான நடிப்பால் தனித்து நின்றார்கள். தற்போது, ​​ஃபர்ஹான் குரேஷி கதாபாத்திரத்திற்காக ஆர் மாதவனின் ஆடிஷன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த வீடியோ ஜனவரி 31 அன்று வித்து வினோத் சோப்ரா பிலிம்ஸால் பகிரப்பட்டது. தணிக்கை டேப்பில் அவரது கதாபாத்திரத்தின் மோனோலாக் காட்சியில் இருந்து ஃபர்ஹான் தனது தந்தையிடம் பொறியியலுக்குப் பதிலாக வனவிலங்கு புகைப்படம் எடுப்பதைத் தொடர அனுமதிக்குமாறு கெஞ்சும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவரது பிரபலமான “மிஸ்டர் கபூர் க்யா சோச்தே ஹைன் ஃபரக் நஹி பத்தா” போன்ற வசனங்கள் முதல் அவரது கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் நிறைந்து நின்றது.  இன்ஸ்டா பதிவில் “@actormaddy’s 3 Idiots ஆடிஷன், ஃபர்ஹான் குரேஷியாக மாதவன் நடிக்க வேண்டும் என்பதற்கான ஆதாரம்!” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவு பகிரப்பட்டதிலிருந்து, 2.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாள்ர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது. பலரும் இந்த பதிவிற்கு கமெண்ட் பிரிவில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  அதில் ஒருவர், “ஃபர்ஹான் குரேஷியாக நடிக்க பிறந்தவர் மாதவன்” என குறிப்பிட்டிருந்தார்.  மேலும் ஒருவர், “ இவ்வளவு திறமை வாய்ந்த நடிகர் ஆடிஷன் கொடுத்ததற்கு தனி மரியாதை” என கூறியுள்ளார்.  

3 இடியட்ஸ் படம் தமிழில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா நடிப்பில் வெளியானது. ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழிலும் மெகா ஹிட் அடித்தது நண்பன் திரைப்படம்.    

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours