சென்னையை அடுத்த பொன்னேரி வேலம்மாள் பள்ளி மாணவர் இளம் புகைப்படக் கலைஞர் வெற்றிவேல், மீனவர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடங்கிய ஆவணப் படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இதை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளியிட்டார்.
அவர் பேசுகையில், "தமிழ் நிலங்களில் நெய்தல் முதன்மையான நிலம். அந்த வாழ்வு குறித்து ஓரளவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் குறையை இந்த ஆவணப்படம் முழுமையாக நிவர்த்தி செய்துள்ளது. இந்தப் புகைப்படங்களைப் பதிவு செய்த வெற்றிவேலுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
+ There are no comments
Add yours