இரண்டு மணிநேரப் படத்தில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் குவான்டம் உலகத்துக்குள், அந்த விநோத உலகத்துக்குள் மட்டுமே நடக்கிறது. ஆனால், அந்த உலகை நிரப்ப உருவாக்கப்பட்டிருக்கும் விதவிதமான உயிரினங்களில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னமும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். முக்கியமாக காங்கின் ஆயுதமாக வரும் ‘MODAK’ பாத்திரத்தின் முகத்தை இன்னமும் சிறப்பாக வார்த்திருக்கலாம். விநோத உயிரினங்கள், இடங்கள் போன்றவற்றின் உச்சத்தை ஏற்கெனவே ‘அவதார்’ உள்ளிட்ட படங்களில் பார்த்துவிட்டதால், ஆன்ட்-மேனின் இந்த குவான்டம் உலகம் சற்றே சுவாரஸ்யம் இழந்து நிற்கிறது.
வழக்கமான இரண்டு சுவாரஸ்ய எண்டு கிரெடிட்ஸ், அடுத்த படத்துக்கான லீட், சாகசக் காட்சிகள், வில்லன் பாத்திரத்தின் தன்மை, காமெடி வசனங்கள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தி, திரைக்கதையில் பெரியளவில் கோட்டை விட்டிருக்கிறது மார்வெல். இவற்றை எல்லாம் தாண்டி ஆன்ட்-மேனின் பயணம் இனி எப்படியிருக்கும், காங்கின் பாத்திரம் என்னவாகும் என இப்படியான சுவாரஸ்யங்களுக்காக மட்டும் அடுத்த படத்துக்கும், ‘லோகி’ சீரிஸின் இரண்டாவது சீசனுக்காகவும் காத்திருக்கலாம்.
பார்த்து பண்ணுங்க மார்வெல்!
+ There are no comments
Add yours