The Girl and an Astronaut: காணாமல் போன விண்வெளி வீரர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு திரும்பினால் எப்படியிருக்கும்? கற்பனையை மெகா சீரியலாய் பார்த்து மகிழுங்கள். நெட்ஃபிளிக்ஸ் தொடர் இன்று முதல் சின்னத்திரையில் வலம் வரவிருக்கிறது The Girl and an Astronaut தொடர். பார்டெக் ப்ரோகோபோவிச் இயக்கத்தில், பிரபல போலந்து நடிகை மக்டலேனா சிலெக்கா மற்றும் வனேசா அலெக்சாண்டர் நடித்த காதல் தொடர், டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது.
ஒரு பெண்ணும் விண்வெளி வீரரும் தொடர்புடையை இந்தக் கதை 30 வருட இடைவெளியுடன் இரண்டு வெவ்வேறு காலவரிசைகளில் சொல்லப்பட்ட வலைத் தொடர் ஆகும்.
2023, பிப்ரவரி 17ம் நாள் முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பிரத்தியேகமாக வெளியிடப்படும் The Girl and an Astronaut தொடரில் மொத்தம் 6 அத்தியாயங்கள் உள்ளன. ஒரு விண்வெளி வீரர் காணாமல் போன 30 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்புவதை வலைத் தொடர் காட்டுகிறது. இழந்த அன்பை மீண்டும் பெறுவாரா விண்வெளி வீரர்?
மேலும் படிக்க | மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ்: பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது
ஆனால், 30 ஆண்டுகளுக்கு பிறகும் அவருக்கு வயதாகவில்லை என்பது ஏன் என்பது உட்பட பல சுவாரசியமான திருப்பங்களையும் கற்பனைக்கெட்டாத விஷயங்களையும் அழகாக சொல்லும் வலைதொடர் இது.
Jędrzej Hycnar, Jakub Sasak, Magdalena Cielecka, Andrzej Chyra, Zofia Jastrzębska, Anna Cieślak, Daria Polunina, Magdalena Boczarska, Grzegorz Damiecki, Agniezka Damiecki, Andrewna Zulovzay என பல பிரபலங்கள் நடித்துள்ள வலைத்தொடர் இது.
இது மார்ட்டா, நிக்கோ மற்றும் போக்டன் ஆகிய மூன்று நபர்களுக்கு இடையேயான காதல் முக்கோணத்தைக் காட்டுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விண்வெளி வீரர் ஒருவர் திரும்பி வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகிரார். இதுவே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில், அவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ, அதே போல் அவர் இருக்கிறார்.
வலி, துக்கம், காதல், கோபம் மற்றும் இழந்த காதலைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடரை பார்க்க பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | தந்தையாக, கணவனாக வென்றரா கவின்.. -டாடா மூவி விமர்சனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
+ There are no comments
Add yours