5 ஸ்டார் உணவகங்களில் விற்கப்படும் உணவைப் போல் அல்லாமல் கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதமாக கல்வியை வழங்க வழி பாடமெடுக்கிறது இந்த ‘வாத்தி’.
90களின் இறுதியில் ஆசிரியர்கள் இல்லாததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த அவல நிலையை மாற்றியமைக்க தனியார் பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதன்படி திருப்பதி எஜுகேஷனல் இன்ஸ்டியூட்டிலிருந்து பாலமுருகன் (தனுஷ்) என்ற ஆசிரியர் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள சோழபுரம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செல்லும் பாலமுருகனுக்கு பல்வேறு அதிர்ச்சிகளும், சவால்களும் அங்கே காத்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து பாலமுருகன் அங்கிருக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி மேம்படுத்துகிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
+ There are no comments
Add yours