2/17/2023 12:27:23 PM
சென்னை: பழநி மலை முருகன் கோயில் கும்பாபிஷேகம், சமீபத்தில் விமரிசையாக நடந்தது. இதையடுத்து சாமியை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திரையுலக நட்சத்திரங்களும் பெருமளவில் பழநி மலை முருகன் கோயிலுக்கு வந்து சாமியை தரிசித்துவிட்டு செல்கின்றனர். சமீபத்தில் நடிகர் பிரபு, நடிகைகள் அமலா பால், சமந்தா ஆகியோர் பழநி மலை முருகன் கோயிலுக்கு வந்தனர். சமந்தாவுக்கு தசை அழற்சி நோய் ஏற்பட்ட பிறகு ஆளே மாறிவிட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உடல்நிலை தேறி வரும் அவர், சில நாட்களுக்கு முன்பு பழநி மலை முருகன் கோயிலுக்கு 600 படிகள் நடந்து சென்று, முருகனை வணங்கி தனது வேண்டுதலை நிறைவேற்றினார். தற்போது கவுதம் கார்த்திக்கும், அவரது மனைவி மஞ்சிமா மோகனும் பழநி மலை முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
+ There are no comments
Add yours