OPS team sends strong message to EPS over video of Thangamani-Velumani | ’தங்கமணி – வேலுமணி வீடியோ இருக்கு’ புதிய புயலை கிளப்பும் ஓபிஎஸ் தரப்பு

Estimated read time 1 min read

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மாவட்டச் செயலாளர் பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமி அணியில் தற்போது உள்ள முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி தன்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டதாகவும், தன்னைபோல் பலரிடம் கேபி முனுசாமி பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் என குற்றம் சாட்டி ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். 

மேலும் படிக்க | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு

தொடர்ந்து சேய்தியாளர்களிடம் பேசிய அவர், ” கேபி முனுசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையின் போது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை விட்டு வெகுதூரம் சென்று விட்டதாகவும், அதிமுகவிற்கு உண்மையாக ஓ.பன்னீர்செல்வம் உழைப்பாரா? என கேள்வி எழுப்பியதற்கு கண்டிக்கிறேன். தர்மயுத்தம்போது பன்னீர்செல்வம் பக்கம் இருந்த கேபி முனுசாமி பணம் சம்பாதிக்கவே எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது மாவட்ட செயலாளர் பதவிக்காக ஒரு கோடி ரூபாய் அவர் கேட்டார்.அந்த ஆடியோவை தற்போது வெளியிட்டுள்ளேன். என்னைபோல் பலர் பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்” என்றார்.

மேலும், சீசனுக்கு எற்றார் போல் வியாபாரம் செய்யும் கேபி முனுசாமி வாயை மூடவில்லை என்றால் அடுத்த இரண்டு நாட்களில் வீடியோ ரிலீஸ் செய்வேன், ஓ பன்னீர்செல்வம் தொடர்பாக பேசினால் இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என எச்சரித்தார். ஓ பன்னீர்செல்வம் உடன் இருந்து கொண்டே எடப்பாடி பழனிச்சாமிக்கு எட்டப்பன் வேலையை கேபி முனுசாமி பார்த்து வந்தார். என்னைப் போல் பலர் பணம் கொடுத்து கேபி முனுசாமியிடம் ஏமாந்துள்ளனர். கட்சிப் பொறுப்பிற்காக அப்போது பணம் கொடுத்தது எனக்கு தப்பாக தெரியவில்லை. ஆனால் இன்று ஓ பன்னீர்செல்வம் தொடர்பாக வரம்பு மீறி முனுசாமி பேசும்போது, கட்சிப் பொறுப்பு வாங்கித் தருவதாக ஒரு கோடி ரூபாய் கேட்ட ஆடியோவை வெளியிடுவதில் தவறில்லை” என தெரிவித்தார்.

மேலும் படிக்க | மதுரை மக்கள் செங்கல்லை எடுக்க போறாங்க! கலாய்த்த உதயநிதி ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours