வாழ்வு தொடங்குமிடம் நீதானே & Valvu thodangum idam neethane

Estimated read time 1 min read

வாழ்வு தொடங்குமிடம் நீதானே

2/16/2023 4:43:37 PM

இளம் பெண்கள் இருவர் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலிக்கும் வாழ்க்கையைப் பற்றி உருவாகியுள்ள படம், ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’. ஷார்ட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும், இச்சமூகத்தில் இயற்கையான உறவுகளை மீறி ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் என்ற தன்பாலின ஈர்ப்பும், அவர்களின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது.

இந்நிலையில், இரண்டு வெவ்வேறு மதப் பின்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இளம் பெண்கள் இருவர், வித்தியாசமான சூழலில் நேரில் சந்தித்து காதலித்து, பிறகு தன்பாலின சேர்க்கையாளர்களாக மாறுகின்றனர். அவர்களின் காதலை சமூகம் அங்கீகரித்ததா? எதிர்ப்புகளை மீறி அவர்களின் காதல் ஜெயித்ததா என்பது கதை.

ஜெயராஜ் பழனி இயக்கியுள்ளார். சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுகவேல், பிரதீப், நிரஞ்சன் நடித்துள்ளனர். சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, தர்ஷன் ரவிக்குமார் இசை அமைத்துள்ளார். இசை பிக்சர்ஸ் சார்பில் நடிகை நீலிமா இசை இணை தயாரிப்பு செய்துள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours