Actress Swara Bhasker’s wedding with political activist Fahad Ahmad | அரசியல் பிரமுகரை கரம் பிடித்த பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர்

Estimated read time 1 min read

டெல்லியைச் சேர்ந்த நடிகை ஸ்வரா பாஸ்கர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தான் திருமணம் செய்து கொண்டதை சர்பிரைஸாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஸ்வரா பாஸ்கர் டிவிட்டர் பதிவு 

ஸ்வரா பாஸ்கர் தன்னுடைய திருமணம் குறித்து டிவிட்டரில் எழுதியிருக்கும் பதிவில், ”சில சமயங்களில் உங்களுக்கு அருகிலேயே இருக்கும் ஒன்றை நீங்கள் தொலைவில் தேடுகிறீர்கள். நாங்கள் அன்பைத் தேடினோம், ஆனால் முதலில் நட்பைக் கண்டோம். பின்னர் ஒருவரையொருவர் கண்டுபிடித்தோம்! என் இதயத்திற்கு வருக ஃபஹத் ஜிரார் அகமத்!” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | இனிமே நாங்க தான், ரசிகர்கள் கொண்டாட்டம்.. ‘மாவீரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியானது!

கணவருடன் முதல் வீடியோ

இந்த பதிவு மட்டுமல்லாமல் கணவருடன் சேர்ந்தது தொடர்பாக வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார் ஸ்வரா பாஸ்கர். அதில் தன்னுடைய கணவர் அரசியல் போராட்டங்களில் பங்கேற்றது முதல் முதல் தடவையாக இருவரும் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டது வரை, மற்றும் பகிர்ந்து கொண்ட பரிசுகள் குறுந்தகவல்கள், தங்களை இணைத்த செல்லப்பிராணியான பூனைகள், தொலைபேசி உரையாடல்கள், கடந்த 6ம் தேதி சிறப்புச் சட்டத்தின் கீழ் பதிவு திருமணம் செய்து கொண்ட ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.  

யார் ஸ்வரா பாஸ்கர்?

டெல்லியைச் சேர்ந்த ஸ்வரா பாஸ்கர் 2009 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். அவருக்கு தற்போது 34 வயதாகிறது. 3 முறை பிலிம்பேர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட அவர், சமூகம் தொடர்பாக விஷயங்களில் அக்கறை கொண்டவர். நாட்டின் முக்கியமான விஷயங்கள் அனைத்துக்கும் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார். இவருடைய கணவர் ஃபஹத் ஜிரார் அகமத் சமாஜ்வாதி கட்சியின் இளைஞர் அணி தலைவராக உள்ளார். 

மேலும் படிக்க | லிப் லாக் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய அனிகா சுரேந்திரன்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours