ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் புத்தம் புதிய சீரியல் ‘சீதா ராமன்’ ஒளிப்பரப்ப உள்ளதால், அந்நேரத்தில் ஒளிப்பரப்பாகி வந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியல் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இருப்பினும் ப்ரைம் டைமில் எப்போதுமே மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள் தான் எல்லா சேனல்களிலும் ஒளிப்பரப்பப்படுகின்றன. அப்படி குறிப்பாக, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றது.
அந்தவகையில் வரும் பிப்ரவரி 20 முதல் ‘சீதா ராமன்’ என்ற புத்தம் புதிய சீரியல், திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்கனவே அந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகி வந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியல், இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் திங்கள் முதல் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் பழையபடி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்டிவியின் ‘ரோஜா’ சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘சீதா ராமன்’ சீரியலில் நாயகியாக நடிக்கிறார். ஜூஜி நாயகனாக நடிக்கிறார். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க உள்ளனர்.
`அழகு என்றால் வெறும் வெளித்தோற்றம் மட்டும் என உறுதியாக நம்பும் மகாலட்சுமி. எதிர்பாராத விதமாக மருமகளாக நுழையும் சீதா, உண்மையான அழகு எது என மகாலட்சுமிக்கு புரிய வைப்பாளா? இல்லையா?’ என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்க உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
+ There are no comments
Add yours