2/16/2023 4:48:40 PM
ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கிய ‘மைக்கேல்’ படத்தில் கவுதம் வாசுதேவ் மேனனின் இரண்டாவது மனைவியாக, சிறுவயது சந்தீப் கிஷனின் தாயாக, கிளப்பில் பாடும் பாடகியாக நடித்தவர் தீப்ஷிகா. அவர் கூறுகையில், ‘விஜய் சேதுபதியுடன் நிறைய காட்சிகள் படமாக்கப்பட்டன. பிறகு படத்தின் நீளம் கருதி அனைத்தும் நீக்கப்பட்டன. விஜய் சேதுபதி அவ்வப்போது நடிப்பு பற்றி சொல்லித்தந்தார். தற்போது ‘உத்வேகம்’ என்ற தெலுங்கு படத்தில் வழக்கறிஞராக நடிக்கிறேன். ஹீரோவாக அருண் ஆதித்யா நடிக்கிறார். அடுத்து ‘ராவண கல்யாணம்’ படத்தில் நடிக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இதில் சந்தீப் மாதவ் ஹீரோவாக நடித்துள்ளார். ரவிதேஜா தயாரிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறேன். ‘மைக்கேல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது நான் நடிக்கும் பல படங்கள் பான் இந்தியா படங்களாக உருவாகின்றன. அதை நினைத்து இன்னும் அதிக உற்சாகத்துடன் பணியாற்றுகிறேன்’ என்றார்.
+ There are no comments
Add yours