”மாடர்ன் தியேட்டர்: MGR, கருணாநிதியின் திரைவாழ்வின் அங்கம்; 129 படங்கள் தயாரித்த இடத்தின் அவல நிலை!” என்கிற தலைப்பில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி விகடன் தளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர். சுந்தரத்துக்கு அன்று 59வது நினைவு தினம்.
அதையொட்டி டி.ஆர்.சுந்தரத்தின் கொள்ளுப் பேரனான கார்த்திகேயன் நம்மிடம் பேசியிருந்தார்.
“மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டூடியோ இயங்கிக் கொண்டிருந்த 10 ஏக்கருக்கும் அதிகமான அந்த இடம் ( அந்த ஆர்ச்சுடன் சேர்த்து) 20 ஆண்டுகளுக்கு முன்னர் ‘முதியோர் இல்லம்’ ஒன்றிற்காக விற்கப்பட்டதாகவும், `முதியோர் இல்லம்’ என்பதால் குறைவான விலைக்கு தங்கள் குடும்பம் இடத்தை விற்றதாகவும் தெரிவித்திருந்தார். வாங்கியவர்கன் ஆர்ச் இருக்கிற இடம் ‘மார்டன் தியேட்டர்ஸ் நினைவாக அப்படியே இருக்கும்’ எனச் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்தார். பின்னாட்களில் பலருக்கு அந்த இடம் கைமாறி தற்போது நாலாவது தரப்பாக ஒருவரிடம் இருப்பதாகவும், சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஒருநாள் அந்த ஆர்ச்சை இடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின அப்போது கார்த்திகேயன், ” சில மாதங்களுக்கு முன்னாடி திடீர்னு ஒருநாள் அந்த ஆர்ச்சை இடிக்கப் போறாங்கன்னு செய்தி கேள்விபட்டோம். அந்தப் பகுதி மக்கள் திரண்டு போய் எதிர்ப்பு தெரிவிச்சதால அந்த முயற்சி கைவிடப்பட்டது.” எனச் சொன்ன கார்த்திகேயன்,
+ There are no comments
Add yours