2/15/2023 12:49:26 PM
சென்னை: கலை இயக்குனர் ஆர்.ராதா நேற்று காலமானார். அவருக்கு வயது 88. எம்ஜிஆர் நடித்த ஆனந்த ஜோதி, தெய்வத்தாய், அடிமைப் பெண், சிவாஜி நடித்த கீழ்வானம் சிவக்கும், பரீட்சைக்கு நேரமாச்சு, ரஜினி நடித்த பில்லா, நான் சிவப்பு மனிதன், பொல்லாதவன், கமல்ஹாசன் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிங்கார வேலன் உள்பட 175 படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சென்னை கோடம்பாக்கத்திலுள்ள வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனர். நேற்று மாலை இறுதிச் சடங்கு நடைபெற்றது.
+ There are no comments
Add yours