இந்தியில் ரீமேக் ஆன ஹாலிவுட் வெப் தொடர்: தமிழிலும் வெளியாகிறது
15 பிப், 2023 – 11:56 IST
‘தி நைட் மேனேஜர்’ என்ற ஹாலிவுட் வெப் தொடர் உலக புகழ்பெற்றது. 6 எபிசோட்கள் கொண்ட இந்த தொடர் 2016ம் ஆண்டில் வெளியானது. இந்த தொடர் தற்போது இதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. பணம் கடத்தல் தொடர்பான பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் தொடர்.
இதில் ‘பொன்னியின் செல்வன்’ புகழ் நடிகை சோபிதா துலிபாலா, பாலிவுட் நட்சத்திரங்கள் அனில் கபூர், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியங்கா கோஷ், ரூக் நபீல், சந்திப் மோடி ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கும் இந்த தொடர், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 17ல் வெளியாகிறது.
தமிழ் இசையமைப்பாளரான சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார். இந்தியில் தயாராகி உள்ள தொடர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழியிலும் வெளியாகிறது.
+ There are no comments
Add yours