பிரபலமான வெப் சீரிஸ்கள் சின்னத்திரையில் ஒளிபரப்பு
14 பிப், 2023 – 15:49 IST

கலர்ஸ் தமிழ் சேனல் புதிய நேரடி தொடர்களை குறைத்துக் கொண்டு புகழ்பெற்ற வெப் சீரிஸ்களை குறுந்தொடர்களாக ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப்.13) முதல் மெமரீஸ், சைபர் வார், டைம் அவுட் ஆகிய வெப் சீரிஸ்களை ஒளிபரப்ப தொடங்கி உள்ளது. வருகிற 24ம் தேதி வரை இவற்றை இரவு 8.30 மணி முதல் 10.30 மணி வரை அடுத்தடுத்து காணலாம்.
8:30 மணிக்கு தொடங்கும் மோஹித் மாலிக் மற்றும் சனாயா இரானி ஆகியோர் நடித்த 20 எபிசோட்கள் கொண்ட ‘சைபர் வார்’ என்ற க்ரைம் த்ரில்லர் மும்பை நகரத்தில் சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தை சொல்கிறது.
இரண்டாவதாக பேன்டஸி ரொமான்ஸ் கிரைம் த்ரில்லரான 13 எபிசோடுகள் கொண்ட ‘மெமரிஸ்’ வெப் சீரிஸ், மனித தன்மையை பற்றியதாகும். ரோஹித் ராய், சுர்லீன் கவுர் மற்றும் ப்ரியால் கோர் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸில் நாயகனால் பல இறந்தவர்களின் ரகசியங்கள், நினைவுகள் மற்றும் ஆசைகள் அனைத்தையும் அறிய முடிகிறது. பிரபலமான செய்தி தொகுப்பாளரான நாயகன் சில மர்மமான தடயங்களையும், இறந்த உடல்களின் ரகசியங்களையும் எப்படி அறிந்து காவல்துறையினருக்கு உதவுகிறார் என்ற மர்மமான திரைக்கதையை கொண்டது. இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ராதா மற்றும் ராகுல் என்ற இரு கதாபாத்திரங்களைப் பற்றிய 6 எபிசோட்கள் கொண்ட ‘டைம்-அவுட்’ வெப் சீரிஸ் 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது காதலை அடிப்படையாக கொண்ட தொடர்.
+ There are no comments
Add yours