மும்பை: நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடித்துள்ள ‘ட்ரீம் கேர்ள் 2’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ‘பதான்’ ஷாருக் உடன் தொலைபேசி வழியே உரையாடுகிறார் ‘பூஜா’ பாத்திரத்தில் நடித்துள்ள ஆயுஷ்மான். இது பரவலாக கவனத்தை பெற்றுள்ளது.
காமெடி டிராமா ஜானரில் கடந்த 2019-ல் வெளிவந்த திரைப்படம் ட்ரீம் கேர்ள். இதில் கரம்வீர் சிங் பூஜா பாத்திரத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபீஸில் தரமான வசூலை ஈட்டி திரைப்படம். இந்தச் சூழலில் இதன் இரண்டாவது பாகம் வரும் ஜூலை 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு உறுதி செய்துள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய ராஜ் சாண்டில்யா, இரண்டாவது பாகத்தையும் இயக்குகிறார். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. சுமார் 1.03 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது இந்த டீசர். இதில் பூஜாவுக்கு போன் கால் செய்யும் பதான் ‘காதலர் தின’ வாழ்த்துகள் சொல்கிறார். இருவரும் உரையாடுகின்றனர். ஷாருக்கின் அடுத்த படமான ஜவான் குறித்தும் இருவரும் பேசுகின்றனர்.
மதுராவில் வசிக்கும் இளைஞரான கரம்வீர் சிங் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தான் படத்தின் கதை எனத் தெரிகிறது. அனன்யா பாண்டே, கரம்வீர் சிங்கின் காதலியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது.
BREAKING NEWS: @Pooja_DreamGirl is back!#7KoSaathMein dekhenge! #DreamGirl2 releasing in cinemas on 7th July, 2023.@writerraj @ananyapandayy @EktaaRKapoor @balajimotionpic pic.twitter.com/hW9xSwHrlq
+ There are no comments
Add yours