“நான் பெசன்ட் நகரில் ஐஸ் டிரக் வச்சிருக்கேன். ஐஸ் கிரீம் சாப்பிட வர்றவங்க என்னைப் பார்த்துட்டு, `உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு’ன்னு சொல்லுவாங்க. பிறகு, அவங்களே வந்து, `நீங்க இந்தப் படத்துல நடிச்சவர் தானேன்னு ஏதாவது படம் பெயர் சொல்லி கேட்பாங்க!’.. ஆமாங்க, கண்டுபிடிச்சிட்டீங்க போலேயேன்னு சொல்லுவேன். ஏன் நடிக்கலைன்னு கேட்கிறவங்ககிட்ட உங்ககிட்ட சொன்ன அதே பதிலைத்தான் சொல்லுவேன்.
சினிமா வாய்ப்புகள் பெரிய அளவில் எனக்கு வரல. ஷார்ட் பிலிம்ஸ்ல நடிக்க கேட்டாங்க. 5,6 நாள் ஆகும்னு அதுவும் என்னால பண்ண முடியல. எனக்கு எப்பவும் ஒரு வேலை பண்ணினா அதுல முழுசா இறங்கி பண்ணிடணும். அங்க ஒண்ணு, இங்க ஒண்ணுன்னு பண்ண எனக்கு எப்பவும் பிடிக்காது. இப்ப பிசினஸ்ல மட்டும்தான் என் முழு கவனமும் இருக்கு. பேட்டி எடுக்கிற சில சேனல்களில் இவரோட நிலைமையைப் பார்த்தீங்களான்னு டைட்டில் வர்றதைப் பார்க்கும்போது நான் பிசினஸ் தானேடா பண்றேன். ஏதோ பிச்சை எடுக்கிற மாதிரி போடுறீங்களே? பிசினஸில் சாதிக்கும் நடிகர்னு போடலாமேன்னு தோணும். ஆனா, அவங்களை சொல்லி என்ன பண்றது. அவங்க வியூஸூக்காக பண்றாங்க. அது அவங்களுடைய சாய்ஸ்! அதை நாம எதுவும் சொல்ல முடியாது” என்றவரிடம் அவருடைய அம்மா குறித்துக் கேட்டோம்.
+ There are no comments
Add yours