‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ பட புகழ் பசில் ஜோசப்புக்கு பெண் குழந்தை | Minnal Murali Director Basil Joseph Welcome A Baby Girl

Estimated read time 1 min read

‘மின்னல் முரளி’ பட இயக்குநரும், ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மூலம் கவனம் பெற்ற நடிகருமான பசில் ஜோசப்புக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் பசில் ஜோசப். இவரது இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘கோதா’ மற்றும் 2021-ம் ஆண்டு வெளியான ‘மின்னல் முரளி’ படங்கள் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இரண்டு படங்களிலுமே நாயகனாக டோவினோ தாமஸ் நடிந்திருந்தார்.

3 படங்களை இயக்கியுள்ள பசில் ஜோசப், பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக அண்மையில் வெளியாகி ஹிட்டடித்த, ‘ன்னா தான் கேஸ் கொடு’, ‘பால்து ஜான்வர்’, ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படங்களின் மூலம் பல்வேறு மொழி சினிமா ரசிகர்களிடையேயும் பாராட்டை பெற்றார் பசில் ஜோசப்.

இவருக்கும் எலிசபத் சாமுவேல் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், தம்பதிகளுக்கு இன்று பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ள பசில், “எங்கள் மகிழ்ச்சியின் உருவகமானவளின் வருகையை அறிவிப்பதில் சந்தோஷம் கொள்கிறோம். அவள் ஏற்கனவே எங்களின் இதயங்களை திருடிவிட்டாள். எங்கள் விலைமதிப்பற்ற மகளின் அன்புடன் நாங்கள் ஆகாசத்தில் பறக்கிறோம். அவளிடமிருந்து ஒவ்வொருநாளும் ஒவ்வொன்றை கற்றுகொள்ளவும், அவளின் வளர்ச்சியைக்காணவும் ஆவலாக உள்ளோம்” என பதிவிட்டுள்ளார்

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours