காதலர் தினம்: 34 ஆண்டுகளுக்கு முன்பு கௌரி கானுக்கு ஷாருக்கான் கொடுத்த காதல் பரிசு என்ன தெரியுமா? | Shah Rukh Khan has opened up about the romantic gift he gave his wife 34 years ago

Estimated read time 1 min read

காதலர் தினத்தன்று உங்களது ரசிகர்களிடமிருந்து என்ன பரிசு விரும்புகிறீர்கள் என்று ஒரு ரசிகர் கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ஷாருக்கான், “எனக்கு ஏற்கனவே நீங்கள் அதனைக் கொடுத்துவிட்டீர்கள். ‘பதான்’ படத்தின் மீது அதிக அன்பு செலுத்திவிட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் கடந்த 1991ம் ஆண்டு கௌரி கானைத் திருமணம் செய்தார். இருவரும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். 1984ம் ஆண்டு பொதுவான நண்பர் ஒருவரின் பார்ட்டியில்தான் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

பார்ட்டியில் கௌரி கான் வேறு ஒருவருடன் நடனமாடிக்கொண்டிருந்தார். அவரிடம் தன்னுடன் நடனமாட வருமாறு கேட்க ஷாருக்கான் தயங்கினார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கௌரியிடம் சென்று தன்னுடன் நடனமாட வருமாறு கேட்டார். ஆனால் தான் தனது பாய் ஃப்ரெண்டிற்காகக் காத்திருப்பதாக கௌரி தெரிவித்திருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் தனது சகோதரனின் வரவுக்காகத்தான் காத்திருந்தார்.

ஷாருக் – கௌரி தம்பதிக்கு ஆர்யன், சுஹானா, ஆப்ராம் ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். சுஹானா பாலிவுட்டில் சோயா அக்தரின் படத்தில் அறிமுகமாகிறார். ஆர்யன் படத்தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours