Hansika Motwani: "என்னை வில்லனாக்கிவிட்டனர்!"- தோழியின் கணவரை அபகரித்துக்கொண்டாரா ஹன்சிகா?

Estimated read time 1 min read

நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் சோஹேல் கதுரியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவிடம் சோஹேல் பிரான்ஸ் ஈபிள் டவர் முன்பு தனது காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொண்டார்.

ஹன்சிகாவிற்கு இது முதல் திருமணம் என்றாலும், சோஹேலுக்கு இது இரண்டாவது திருமணமாகும். அதுவும் சோஹேல் நடிகை ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கியின் முன்னாள் கணவர் ஆவார். தனது தோழி 2014-ம் ஆண்டு சோஹேலைத் திருமணம் செய்து கொண்டபோது அதில் ஹன்சிகாவும் விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்தப் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையாகின.

திருமணத்தில் ஹன்சிகா

பின்னர் இருவரும் பிரிந்த பிறகு ஹன்சிகாவும், சோஹேலும் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டபோது தோழியின் கணவரை ஹன்சிகா அபகரித்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ரிங்கியின் குடும்பத்தை உடைத்துவிட்டதாக சோசியல் மீடியாவில் பலரும் ஹன்சிகா மீது குற்றம் சாட்டினர். அதற்கு ஹன்சிகா தற்போது பதிலளித்துள்ளார்.

‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ள அவரது திருமணம் குறித்த டாக்கு சீரிஸில் ஹன்சிகாவும், சோஹேலும் கலந்துகொண்டு பேசியுள்ளனர்.

அதில் பேசிய சோஹேல், “எனது முதல் திருமணம் தொடர்பாக வெளியான செய்திகள் தவறானது. முதல் திருமணம் முறிந்து போனதற்கு ஹன்சிகா காரணம் என்று சொல்லப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. அக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது. எனது முதல் திருமணம் சிறிது காலமே நீடித்தது. நானும் ஹன்சிகாவும் நண்பர்கள். எனவே அவர் எனது திருமணத்தில் அப்போது கலந்துகொண்டார். அதனை யாரோ போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அதனால்தான் இது போன்ற செய்திகள் வருகின்றன” என்று தெரிவித்தார்.

ஹன்சிகா மோத்வானி

தொடர்ந்து பேசிய ஹன்சிகா மோத்வானி, “ஒருவரை எனக்கு முன்னரே தெரியும் என்பதற்காக அவரது திருமண முறிவுக்கு நான் காரணம் என்று கூறிவிட முடியாது. அவர்களின் திருமண முறிவுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. நான் சினிமாவில் இருப்பவர் என்பதால் என்னை எளிதில் இதில் வில்லனாக்கிவிட்டனர்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தனது திருமணத்திற்கு தன் குடும்பம் எவ்வாறு தயாரானது என்பது உட்படப் பல்வேறு அம்சங்கள் குறித்து ஹன்சிகா பேசியிருக்கிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours