கிருத்திகாவின் ஆல்பத்துக்கு இசை அமைத்த இளையராஜா
10 பிப், 2023 – 15:01 IST

விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி. வணக்கம் சென்னை, காளி படங்களை இயக்கி உள்ளார். பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் இயக்கினார்.
தற்போது அவர் ‘யார் இந்த பேய்கள்’ என்ற இசை ஆல்பத்தை இயக்கி உள்ளார். இது குழந்தைகளின் மனதை கலைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்யும் ஆண்களை பற்றியது. குழந்தைகளை இதில் இருந்து எப்படி காப்பாற்ற வேண்டும் என்பதையும் சொல்லும் ஆல்பம். இந்த ஆல்பத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பா.விஜய் எழுதிய பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி உள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சீர் என்ற அமைப்பு இதனை யு டியூப்பில் வெளியிட்டுள்ளது.
பாடல் லிங்க் : https://www.youtube.com/watch?v=nXYnP4f7HNs
+ There are no comments
Add yours