‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மித்ரன் ஜவஹர், நடிகர் மாதவனுடன் கைகோத்துள்ளார்.
தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியாபவானி ஷங்கர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பெரிய அளவில் விளம்பரம் இல்லாமல் வெளியான இப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.110 கோடியை வசூலித்தது. விமர்சன ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
+ There are no comments
Add yours