டாடா (தமிழ்)
கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாடா’. பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
வசந்த முல்லை (தமிழ்)
ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, ஆர்யா, காஷ்மீரா பர்தேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வசந்த முல்லை’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
வர்ணாஸ்ரமம் (தமிழ்)
சுகுமார் அழகர்சாமி இயக்கத்தில் ராமகிருஷ்ணன், சிந்தியா, ‘பிக் பாஸ்’ அமீர், விஷ்ணவி ராஜ், நிமி மானுவல், ஸ்ரீராம் கார்த்திக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘வருணாஸ்ரமம்’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கொடை (தமிழ்)
ராஜசெல்வம் இயக்கத்தில் கார்த்திக் சிங்கா, ரோபோ சங்கர், அனயா, எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் ‘வருணாஸ்ரமம்’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Christopher (மலையாளம்)
இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மம்மூட்டி, சினேகா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘கிறிஸ்டோபர்’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Romancham (மலையாளம்)
ஜித்து மாதவன் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், அர்ஜுன் அசோகன், செம்பன் வினோத் ஜோஸ், சஜின் கோபு, சிஜு சன்னி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Romancham’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Amigos (தெலுங்கு)
ராஜேந்திர ரெட்டி இயக்கத்தில் நந்தமூரி கல்யாண் ராம், ஆஷிகா ரங்கநாத், பிரம்மாஜி, சப்தகிரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் ‘Amigos’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Popcorn (தெலுங்கு)
இயக்குநர் முரளி காந்தம் இயக்கத்தில் அவிகா கோர், சாய் ரோனக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் ‘Popcorn’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Shiv Shastri Balboa (இந்தி)
அஜயன் வேணுகோபாலன் இயக்கத்தில் அனுபம் கெர், நர்கிஸ் ஃபக்ரி, நீனா குப்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழித் திரைப்படம் ‘Shiv Shastri Balboa’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
A Man Called Otto (ஆங்கிலம்)
மார்க் ஃபார்ஸ்டர் இயக்கத்தில் டாம் ஹாங்க்ஸ், ரேச்சல் கெல்லர், மானுவல் கார்சியா-ருல்ஃபோ, கேமரூன் பிரிட்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் ‘A Man Called Otto’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Magic Mike’s Last Dance (ஆங்கிலம்)
ஸ்டீவன் சோடர்பெர்க் இயக்கத்தில் சல்மா ஹைக், சானிங் டாட்டம், கெய்ட்லின் ஜெரார்ட், ஆலன் காக்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் ‘Magic Mike’s Last Dance’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
ஓடிடி வெளியீடுகள்
Dear David (இந்தோனேசியன்) – Netflix
இயக்குநர் லக்கி குஸ்வாண்டி இயக்கத்தில் ஷெனினா சின்னமென், எமிர் மஹிரா, கெய்ட்லின் நார்த் லூயிஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தோனேசிய மொழித் திரைப்படம் ‘Dear David’. இத்திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி (நேற்று) ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Your Place or Mine (ஆங்கிலம்) – Netflix
அலின் ப்ரோஷ் மெக்கென்னா இயக்கத்தில் ரீஸ் விதர்ஸ்பூன், ஆஷ்டன் குட்சர், வெஸ்லி கிம்மல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் ‘Your Place or Mine’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.
10 Days of Good Man (துருக்கி) -Netflix
உலுச் பைரக்டர் இயக்கத்தில் நெஜாட் இஸ்லர், நூர் ஃபெட்டாஹோக்லு, செனாய் குர்லர், இலேடா அக்டோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள துருக்கிய மொழித் திரைப்படம் ’10 Days of Good Man’. இத்திரைப்படம் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) ‘Netflix’ தளத்தில் வெளியாகியுள்ளது.
Farzi (இந்தி) – Prime Video
‘தி பேமிலி மேன்’ புகழ் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் ஷாஹித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் ‘Farzi’. இது பிப்ரவரி 10 (இன்று) பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ளது. எட்டு எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது.
Marvel Studios: Legends Season 2 (ஆங்கிலம்) – Disney Plus Hotstar
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியாகியிருந்த ‘Marvel Studios: Legends’ வெப்சீரிஸின் இரண்டாம் சீசன் தற்போது ‘Disney Plus Hotstar’ தளத்தில் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
துணிவு (தமிழ்) – Netflix
அ.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படம் ‘Netflix’ தளத்தில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி வெளியாகியுள்ளது.
Mahaveeryar (மலையாளம்) – SunNXT
அப்ரிட் ஷைன் இயக்கத்தில் நிவின் பாலி, ஆசிப் அலி, லால் உள்ளிட்டோர் நடித்த மலையாள மொழித் திரைப்படம் ‘Mahaveeryar.’ திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தற்போது ‘SunNXT’ தளத்தில் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
ராஜயோகம் (தெலுங்கு) – Disney Plus Hotstar
ராம் கணபதி இயக்கத்தில் சாய் ரோனக், அஜய் கோஷ், அங்கிதா சாஹா உள்ளிட்டோர் நடித்த தெலுங்கு மொழித் திரைப்படம் ‘ராஜயோகம்’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Disney Plus Hotstar’ தளத்தில் பிப்ரவரி 10ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
VEDHA (கன்னடம்) – Zee5
ஹர்ஷா இயக்கத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், கனவி லக்ஷமண், ஸ்வேதா செங்கப்பா உள்ளிட்டோர் நடித்த கன்னட மொழித் திரைப்படம் ‘Mahaveeryar’. திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ தளத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியாகியுள்ளது.
Salaam Venky (இந்தி) – Zee5
பிரபல நடிகை ரேவதியின் இயக்கத்தில் கஜோலின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த ‘Salaam Venky’ என்ற இந்தித் திரைப்படம் தற்போது ‘Zee5’ தளத்தில் வெளியாகியுள்ளது.
+ There are no comments
Add yours