ஷாருக்கான் கட்டியிருக்கும் ரூ.4.98 கோடி மதிப்புள்ள கடிகாரம் – அதில் அப்படி என்ன ஸ்பெஷல்? | Actor Shah Rukh Khan wears a luxury watch worth Rs Five Crores

Estimated read time 1 min read

அந்தக் கை கடிகாரத்தின் விலை ரூ.4.98 கோடியாகும். அதை ஷாருக்கான் சுவிட்சர்லாந்தில் வாங்கியிருக்கிறார். அது புகழ்பெற்ற, பாரம்பர்யமிக்க ஆடெமர்ஸ் பிகுட் (Audemars Piguet) என்ற பிராண்ட் வாட்ச். இதன் மாடல் பெயர் ‘ராயல் ஓக் காலண்டர் வாட்ச்’ (Royal Oak Perpetual Calendar watch) என்று கூறப்படுகிறது.

1875-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கடிகாரங்களுக்கு என்றே தனி மதிப்பு உண்டு. இதன் பெரும்பாலான தயாரிப்புகள் லிமிடெட் எடிஷன் என்பதால்தான் விலை விண்ணை முட்டுகிறது என்கிறார்கள். ஷாருக்கான் அணிந்திருக்கும் மாடலின் விலையை இப்போது இணையத்தில் பார்த்தபோது தோராயமாக ரூ.4.70 கோடி எனக் காட்டியது.

ஷாருக்கான் கையிலிருக்கும் விலையுயர்ந்த வாட்ச்

ஷாருக்கான் கையிலிருக்கும் விலையுயர்ந்த வாட்ச்

ஷாருக்கானின் மும்பை வீடும் மிகவும் ஆடம்பரமான ஒன்றாகும். மும்பை பாந்த்ரா பகுதியில் கடற்கரையையொட்டி இருக்கும் அவரின் மன்னத் பங்களாவின் மதிப்பு ரூ.200 கோடி என்கிறார்கள். இது தவிர ஷாருக்கானிடம் பிஎம்டபிள்யூ 6 மற்றும் 7 மாடல் கார்கள், ஆடி கார்கள் இருக்கின்றன. ஷாருக்கானுக்கு டெல்லியிலும், துபாயிலும் சொகுசு வீடுகளும் இருக்கின்றன. அதோடு சொந்தமாக ஐ.பி.எல் கிரிக்கெட் அணியும் வைத்திருக்கிறார். அந்த அணியில் நடிகை ஜுஹி சாவ்லாவுக்கும் சிறிய பங்கு இருக்கிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours