மீண்டும் சீண்டிய பிரகாஷ்ராஜ் : காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் பதிலடி

Estimated read time 1 min read

மீண்டும் சீண்டிய பிரகாஷ்ராஜ் : காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் பதிலடி

10 பிப், 2023 – 10:26 IST

எழுத்தின் அளவு:


Vivek-Agnihotri-reply-to-Prakashraj

கடந்தாண்டு துவக்கத்தில் ஹிந்தியில் காஷ்மீர் பைல்ஸ் என்கிற படம் வெளியாகி அரசியல் அரங்கில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரில் பண்டிட்டுகள் பலர் கொல்லப்பட்டது மற்றும் அங்கிருந்து பலர் அகற்றப்பட்டதன் பின்னணியை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி இருந்தது.

விவேக் அக்னிகோத்ரி யக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதேசமயம் இந்த படத்திற்கு எதிரான கருத்துக்களும் அப்போது கிளம்பின. குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு சில கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கூட வழங்கப்பட்டது

இந்த படம் வெளியான சமயத்தில் இதை கடுமையாக விமர்சித்தவர்களில் நடிகர் பிரகாஷ்ராஜும் ஒருவர். மத்திய அரசு இந்த படத்திற்கு ஆதரவு வழங்கியது. பிரகாஷ்ராஜின் கோபத்தை இன்னும் தூண்டிவிட்டது என்றே சொல்லலாம். அவ்வப்போது இந்தப்படம் குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் விமர்சனம் செய்து வரும் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச கடிதங்கள் விழாவில் கலந்து கொண்டபோதும் தனது விமர்சனத்தை வைக்க தவறவில்லை.

இந்த நிகழ்வில் பேசிய பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வரும் பாய்காட் கலாச்சாரம் குறித்து பேசும்போது, அப்படியே காஷ்மீர் பைல்ஸ் படத்தைப் பற்றியும் அதன் இயக்குனர் விவேக் அக்னிகோதிரி பற்றியும் மீண்டும் கடுமையாக விமர்சித்தார். “காஷ்மீர் பைல்ஸ் ஒரு நான்சென்ஸ் படம். சமீபத்தில் சர்வதேச சூரி ஒருவரே அந்தப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்படி ஒரு படத்தை இயக்கிவிட்டு அந்த படத்தின் இயக்குனர் எனக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார். ஆஸ்கர் அல்ல பாஸ்கர் விருது கூட அவருக்கு கிடைக்காது” என்று அந்த நிகழ்வில் பேசினார் பிரகாஷ்ராஜ்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இயக்குனர் விவேக் அக்னிகோதிரி கூறும்போது, “மக்களுக்கான ஒரு சிறிய படம் தான் காஷ்மீர் பைல்ஸ். ஆனால் பல பேருக்கு தூக்கம் இல்லாத இரவுகளை இது கொடுத்து விட்டது. குறிப்பாக அர்பன் நக்சல்கள் கடந்த ஒரு வருடமாக இதனால் தொந்தரவுக்கு ஆளாகி இருக்கின்றனர். அது மட்டுமல்ல எனக்கு எப்படி பாஸ்கர் கிடைக்கும்.. அது எல்லாமே உங்களுக்கு மட்டும் தான் எப்போதும் உரியது” என்று கூறியுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours