புத்தகம் ஆகிறது நடிகர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு! | late actress sridevi life story to be published as a book boney kapoor shares

Estimated read time 1 min read

சென்னை: மறைந்த இந்திய திரைப்பட நடிகர் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு, புத்தகமாக வெளியாக உள்ளது. இந்தப் புத்தகம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும். இதனை அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2018-ல் காலமானார் நடிகர் ஸ்ரீதேவி. தமிழ் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்து பின்னாளில் கதையின் நாயகியாக நடித்து அசத்தியவர். ‘16 வயதினிலே’ படத்தில் மயிலாக வந்து கலக்கி இருப்பார். அப்படியே தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். சுமார் 300 படங்களில் நடித்துள்ளார்.

1996-ல் போனி கபூரை மணந்தார். ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகளின் தாயார். 2018-ல் துபாய் சென்றபோது அவர் உயிரிழந்தார்.

இந்தச் சூழலில் அவரது வாழ்க்கைக் கதை, புத்தகமாக வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் புத்தகத்தை தீரஜ் குமார் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஸ்ரீதேவியை நன்கு அறிந்தவர் எனத் தகவல். வெஸ்ட்லேண்ட் புக்ஸ் நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியட உள்ளதாகவும் தெரிகிறது.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours