Jyotika settled in Mumbai – Dinakaran Cinema News

Estimated read time 1 min read

மும்பையில் குடியேறிய ஜோதிகா

2/8/2023 1:21:19 PM

இணையதளங்களில் தங்களது போட்டோக்களை எப்படி வைரலாக்குவது என்ற வித்தையை நன்கு தெரிந்துள்ள நடிகைகளில் ஒருவர், ஜோதிகா. சில படங்களில் தன்னுடன் நடித்த சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்ட அவர், தற்போது தனது மகள் தியா, மகன் தேவ் ஆகியோர் நன்கு வளர்ந்துள்ள நிலையில், மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். இந்நிலையில், தனது வாரிசுகளுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

 தியா தனது கையில் நாய்க்குட்டியுடன் இருக்கும் போட்டோவுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்துள்ளனர். மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘காதல்’ படத்திலும், இந்தியில் ‘’ என்ற படத்திலும் நடித்து வரும்ஜோதிகா , தற்போது மும்பையிலுள்ள வீட்டில் மகள் மற்றும் மகளுடன் குடியேறியுள்ளார். அவர்களின் படிப்புக்கு அங்குதான் பொருத்தமான இடம் கிடைத்ததாம். சென்னையில் ஷூட்டிங் இருந்தால் பெற்றோருடன் தி.நகர் வீட்டில் தங்கும் சூர்யா, ஷூட்டிங் இல்லாத நாட்களில் மும்பைக்குப் பறந்துவிடுகிறார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours