ரஜினிகாந்த் நடித்த ‘காளி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த ஹேம் நாக் பாபுஜி காலமானார். அவருக்கு வயது 76.
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் வலம் வந்தவர் ஹேம் நாக். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான படம் ‘காளி’. இந்தப் படத்தை ஹேம் நாக் பாபுஜி தயாரித்திருந்தார். அதேபோல ரஜினியின் ‘கர்ஜனை’ மற்றும் கின்னஸ் சாதனைக்காக 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட ‘சுயம்வரம்’ திரைப்படத்தை பாபுஜி தயாரித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த பாபுஜி, தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
76 வயதான இவர், வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு திரைப்பட பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
+ There are no comments
Add yours