ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், அஷுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா என நட்சத்திரப் பட்டாளத்துக்கு மத்தியில் கூடுதல் இணைப்பாக சல்மான் கானும் கௌரவத் தோற்றத்தில் வந்துபோகிறார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லா வுட்டிலும் இது யுனிவர்ஸ் தொடங்கும் காலகட்டம் என்பதால், இந்தப் படமும் அந்த டிரெண்டில் இணைந்திருக்கிறது. சல்மான் கான் நடித்த ‘ஏக் தா டைகர்’, ‘டைகர் ஜிந்தா ஹை’, ஹ்ரித்திக் ரோஷன் நடித்த ‘வார்’ படங்களைத் தயாரித்த யாஷ் ராஜ் நிறுவனமே இதையும் தயாரித்திருப்பதால், இவற்றை எல்லாம் இணைத்து ‘ஸ்பை யுனிவர்ஸ்’ என்ற ஒன்றை உருவாக்கி, அதில் நான்காவது படைப்பாக ‘பதான்’ படத்தைக் களமிறக்கியிருக்கிறார்கள். யுனிவர்ஸ் என்பதால் சல்மான் கான் தன்னுடைய ‘டைகர்’ கதாபாத்திரமாகவே இதிலும் வருகிறார்.
+ There are no comments
Add yours