‘M3GAN’ என்ட்ரிக்குப் பிறகே கியர் மாற்றம் நிகழ்ந்து கதையின் ஓட்டத்தில் தீப்பற்றிக்கொள்கிறது. பக்கத்து வீட்டுப் பெண்மணி, தொல்லை செய்யும் நாய், சண்டையிடும் பள்ளிச் சிறுவன், பொம்மை நிறுவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள், ஜெம்மாவின் பழைய ரோபோ என அனைத்து பிரதான கதாபாத்திரங்களுக்கும் பக்காவான ஸ்டேஜிங் கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியிருக்கிறது திரைக்கதை. ஆனால், அதுவே அடுத்து என்ன என யூகிக்கவும் வைத்துவிடுவதால் படத்தின் சுவாரஸ்யம் குன்றிவிடுகிறது.
காட்டுக்குள் பள்ளிச் சிறுவனுடன் நடக்கும் சண்டை, பக்கத்து வீட்டுப் பெண்மணியுடனான சண்டை, க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி என அனைத்துமே சுவாரஸ்யமாகப் படமாக்கப்பட்டுள்ளன. இதுதான் முடிவு என்பது முன்னரே தெரிந்துவிட்டாலும் நம் கவனத்தை எங்குமே சிதறவிடாமல் கட்டிப்போட்டிருக்கிறது பீட்டர் மெக்கேஃப்ரேயின் ஒளிப்பதிவும், ஜெஃப் மெக்எவோய்யின் படத்தொகுப்பும். ஆண்டனி வில்லீஸின் பின்னணி இசை மிரட்டல் காட்சிகளுக்குப் பக்கபலம்.
+ There are no comments
Add yours