“என்னை உளவு பார்ப்பவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அடிப்பேன்…” – கங்கனா ரணாவத்தின் பதிவு!| Kangana Ranaut’s Instagram story goes viral

Estimated read time 1 min read

அரசியல் குறித்து தீவிரமாகப் பதிவிட்டுவந்த அவர், சமீபகாலமாக பாலிவுட் திரைப்படத் துறை குறித்துக் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்தவகையில், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “எனது வாட்ஸ்அப் தரவுகள், தொழில்முறை ஒப்பந்தங்கள் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் கசிந்துள்ளன என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று குறிபிட்ட்டிருந்தார். மேலும், பெயர்களைக் குறிப்பிடமால் சமீபத்தில் பெற்றோரான சினிமா துறையைச் சேர்ந்த ஒரு ஜோடி தன்னை உளவு பார்த்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

கங்கனா ரணாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு

கங்கனா ரணாவத்தின் இன்ஸ்டாகிராம் பதிவு

இது சர்சையானதை அடுத்து பலரும் ‘யார் உங்களை உளவு பார்க்கிறார்கள்?’ என்று கங்கனாவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் இதுபற்றி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள கங்கனா, “என்னைப் பற்றி கவலைப்படுபவர்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். என்னைச் சுற்றி எந்த சந்தேகத்திற்கிடமான செயல்களும் நடைபெறவில்லை. கேமராக்களுடனும், அவை இல்லாமலும் என்னை யாரும் பின்தொடரவில்லை. இருப்பினும், இந்த சதிச்செயலுக்குப் பின்னால் செயல்படுபவர்களுக்கும், என்னை முட்டாளாக நினைப்பவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் வீடுகளுக்குள் நுழைந்து உங்களை அடிப்பேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours