இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர் சிவா நடிக்கும் புதிய படத்திற்கான பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன.
‘கற்றது தமிழ்’,‘தங்க மீன்கள்’,‘தரமணி’ ‘பேரன்பு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் மலையாள நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து ‘ஏழு கடல், ஏழு மலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஞ்சலி, சூரி, உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், இயக்குநர் ராம் அடுத்தாக ‘சென்னை 28’, ‘தமிழ்ப் படம்’ மூலம் கவனம் பெற்ற நடிகர் சிவாவுடன் இணைகிறார்.
இப்படம் குறித்த தகவல்கள் பரவலாக வெளியான நிலையில், தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாருடன் இணைந்து செவன் சீஸ், செவன் ஹீல்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது. மிர்ச்சி சிவா, க்ரேஸ் ஆண்டனி நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இயக்குநர் ராம் மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்ட கதைகளை இயக்குபவர், சிவாவை பொறுத்தவரை காமெடி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர். இருவரும் இணையும் புதிய படம் ரசிகர்களிடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
+ There are no comments
Add yours