Trisha out of Thalapathy 67 Leo | தளபதி 67 படத்தில் இருந்து விலகிய திரிஷா? லோகேஷ் கனகராஜுடன் சண்டையா?

Estimated read time 1 min read

Leo, Trisha: நடிகை திரிஷா 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மொத்த படக்குழுவுன் அங்கிருக்க திரிஷா மட்டும் 3 நாட்களில் சென்னை திரும்பினார். அப்போது பலரும் திரிஷா-வை முதல் சீனிலேயே லோகேஷ் கொன்றுவிட்டாரா என கலாய்த்து மீம்ஸ் போட்டிருந்தனர். 

அதன் தொடர்ச்சியாக லியோ படம் தளபதிக்கு மட்டும் அல்ல தலைவி திரிஷாவுக்கும் 67-வது படம் தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படிக்க | Lata Mangeshkar: இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு முதலாமாண்டு அஞ்சலி! ஆராரோ ஆரிரோ

இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஒருசில பதிவுகளை நடிகை திரிஷா நீக்கியதாக தெரிகிறது. லியோ படம் குறித்து அவர் ரீ-ட்வீட் செய்திருந்ததையும் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் லியோ படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் ஒரு வதந்தி பரவியது. ஆனால் திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தில் Pinned post-ல் விஜய்யும், திரிஷாவும் லியோ பட பூஜையின் போது சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் வைத்துள்ளார்.

அதோடு, விஜய் – திரிஷா-வை வைத்து யூடியூப் நிறுவனம் ஒன்று தமிழ் சினிமாவின் கனவு ஜோடி என போட்டிருந்த பதிவையும் அவர் ரீ-ட்வீட் செய்துள்ளார். இதனால் அவர் படத்தில் இருந்து விலகவில்லை எனவும், வழக்கமாக தான் ரீ-ட்வீட் செய்வதை ஒரு சில நாட்களில் திரிஷா டெலீட் செய்து விடுவார் எனவும், அப்படித்தான் லியோ படம் குறித்து சில பதிவுகளை நீக்கியதாகவும் திரிஷாவுக்கு நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே, திரிஷா லியோ படத்தில் இருந்து விலகியதாக பரவி செய்தி எல்லாம் வதந்தியே.

மேலும் படிக்க | மீண்டும் தொடங்கும் குஷி படப்பிடிப்பு! சமந்தா வருவாரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours